மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்....
நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்...
ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நிமிடங்கள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே...
இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே...
காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்ததே....அன்பே
இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம்....அன்பே
இதம் தருமே..
உன் கரம் கோர்க்கையில்
நினைவு ஓர் ஆயிரம்...
பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்...
காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது...
ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்னை இழந்தேன் என....
ஒரு முறை வாசலில்
நீயாய் வந்தால் என்ன...?
நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன...?
இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்து கொண்டால் என்ன...?
இரு திசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன...?
என் தேடல்கள் நீ இல்லை
உன் கனவுகள் நான் இல்லை
இரு விழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன...?
உன் சின்னஞ்சிறு கண்களால் நீ எனக்களித்த
சின்னஞ்சிறிய காதலைக்கொண்டு
நான் எழுதி எழுதிப் பார்த்துக்கொண்டிருக்கும் கவிதைகளை...
நீ எங்காவது படிக்கும் போது...
இந்தக் கவிதைகளில் வருகின்ற பெண் நீதான் என்பதை,
நீ கடைசி வரை அறியாமல் போனால் கூட,
அதற்காக கொஞ்சமும் கவலை கொண்டு விடாது என் காதல்...
ஆனால்... அதற்கு மாறாக...
'இந்தக் கவிதைகளில் வருகின்ற பெண் நானாக இருக்கக் கூடாதா'
என்று மட்டும் நீ நினைத்து விட்டால்..
அதற்காகப் பெரும் கவலை கொண்டு
துடித்துப் போகும் என் காதல்....
ஏனென்றால்...என் கவிதைகளில் வருகின்ற உன்னை விட,
மிக மிக அற்புதமாய் நீ ஏதோ ஓர் இல்லத்தை
காதலால் ஆட்சி செய்து கொண்டிருப்பாய் என்று
நம்பிக்கொண்டிருக்கின்ற காதலைத்தான் நீ எனக்கு வழங்கியிருக்கிறாய்...........
மழையில் நனைந்த குழந்தையினை தன் முந்தானையால் துடைத்து விடும் ஒரு தாயை... மழையில் நனைந்த படியே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு தாயில்லாச் சிறுமியைப் போல்.... கடற்கரையிலும் பூங்காக்களிலும் இணை இணையாய் அமர்ந்திருக்கும் காதலர்களைப் பார்த்தபடி தன்னந்தனியே நிற்கிறது உனக்கான என் காதல்......