♥♥♥ விழியீர்ப்பு விசை ♥♥♥

♪♫♪ இது காதலர் சாம்ராஜ்யம் ♪♫♪

♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥





மாலை நேரம்
மழை தூறும் காலம்
என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன்....


நீயும் நானும்
ஒரு போர்வைக்குள்ளே
சிறு மேகம் போலே மிதக்கிறேன்...


ஓடும் காலங்கள்
உடன் ஓடும் நிமிடங்கள்
வழி மாறும் பயணங்கள்
தொடர்கிறதே...


இது தான் வாழ்க்கையா
ஒரு துணை தான் தேவையா
மனம் ஏனோ என்னையே கேட்கிறதே...






காதல் இங்கே ஓய்ந்தது
கவிதை ஒன்று முடிந்தது
தேடும் போதே தொலைந்ததே....அன்பே


இது சோகம் ஆனால் ஒரு சுகம்
நெஞ்சின் உள்ளே பரவிடும்
நாம் பழகிய காலம் பரவசம்....அன்பே
இதம் தருமே..


உன் கரம் கோர்க்கையில்
நினைவு ஓர் ஆயிரம்...


பின் இரு கரம் பிரிகையில்
நினைவு நூறாயிரம்...


காதலில் விழுந்த இதயம்
மீட்க முடியாதது
கனவில் தொலைந்த நிஜங்கள்
மீண்டும் கிடைக்காதது...








ஒரு காலையில் நீ இல்லை
தேடவும் மனம் வரவில்லை
பிரிந்ததும் புரிந்தது
நான் என்னை இழந்தேன் என....


ஒரு முறை வாசலில்
நீயாய் வந்தால் என்ன...?


நான் கேட்கவே துடித்திடும்
வார்த்தை சொன்னால் என்ன...?


இரு மனம் சேர்கையில் பிழைகள்
பொறுத்து கொண்டால் என்ன...?







இரு திசை பறவைகள் இணைந்து
விண்ணில் சென்றால் என்ன...?


என் தேடல்கள் நீ இல்லை
உன் கனவுகள் நான் இல்லை
இரு விழி பார்வையில்
நாம் உருகி நின்றால் என்ன...?








♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥


♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥


உன் சின்னஞ்சிறு கண்களால் நீ எனக்களித்த
சின்னஞ்சிறிய காதலைக்கொண்டு
நான் எழுதி எழுதிப் பார்த்துக்கொண்டிருக்கும் கவிதைகளை...
நீ எங்காவது படிக்கும் போது...
இந்தக் கவிதைகளில் வருகின்ற பெண் நீதான் என்பதை,
நீ கடைசி வரை அறியாமல் போனால் கூட,
அதற்காக கொஞ்சமும் கவலை கொண்டு விடாது என் காதல்...

ஆனால்... அதற்கு மாறாக...
'இந்தக் கவிதைகளில் வருகின்ற பெண் நானாக இருக்கக் கூடாதா'
என்று மட்டும் நீ நினைத்து விட்டால்..
அதற்காகப் பெரும் கவலை கொண்டு
துடித்துப் போகும் என் காதல்....

ஏனென்றால்...என் கவிதைகளில் வருகின்ற உன்னை விட,
மிக மிக அற்புதமாய் நீ ஏதோ ஓர் இல்லத்தை
காதலால் ஆட்சி செய்து கொண்டிருப்பாய் என்று
நம்பிக்கொண்டிருக்கின்ற காதலைத்தான்
நீ எனக்கு வழங்கியிருக்கிறாய்...........








♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥



♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥


மழையில் நனைந்த
    குழந்தையினை
தன் முந்தானையால் 
      துடைத்து விடும் 
                  ஒரு தாயை...
மழையில் நனைந்த படியே
   பார்த்துக்கொண்டிருக்கும்
ஒரு தாயில்லாச்
            சிறுமியைப் போல்....
  கடற்கரையிலும்
  பூங்காக்களிலும்
இணை இணையாய்
           அமர்ந்திருக்கும்
காதலர்களைப் பார்த்தபடி
தன்னந்தனியே நிற்கிறது
                              உனக்கான 
             என் காதல்......





♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥




♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥



நான் 
உன் பெயரை
ஒருவரிடமும்
ஒருமுறை கூடச்
சொன்னதில்லை.....


அப்படிச்சொன்னால்
உன் பெயர்களில் ஒன்று
என்னை விட்டுப் 
போய் விடாதா...????









♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥




♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥       

                 நீ இன்னும் என்னை 
                     மறக்கவில்லை...


                           அதனால்தான் 
                           நான் இன்னும்
                                  உயிரோடு
                         இருக்கிறேன்....










♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥



♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥


உன்னை முதன்முதலில் 
          இரவு உடையில் பார்த்த நாள்..
புதிய உடை அது...
ஆனாலும் நீதான் உடையை விடப்
     புதிதாய் இருந்தாய்...


இரவின் ரம்மியத்திற்கும்
   ராத்திரி ஈரக்காற்றுக்கும்
நண்பர்களின் அதிசயப் பார்வைக்கும்
  நடுவே....
                      நீதான்....
நீதான் உலகமாக இருந்தாய்...
அந்த அதி அற்புதக் காற்சிதான்...
நான் கண்களை மூடினாலே
விஸ்வரூபம் எடுக்கிற காட்சி...இன்றும்...







♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥

♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥


இன்று நீ எங்கே, எப்படி இருக்கிறாய்
என்று எனக்குத் தெரியாது...


ஆனால் எனக்குள் பத்திரமாய் இருக்கிறாய்...
ஏழு வருடங்களாக...
அதே பதினேழு வயதுத் தேவதையாய்....
அதே பரிசுத்தத்துடன்...



♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥
♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥


ஆகாயம் தீண்டவே
ஆவேசம் வந்ததே...


இளந்தென்றல் இசை கொடுக்க...
இள மங்கை கை கொடுக்க...


கனவெல்லாம் நிஜமாக
கண்ணெதிரே தொலைந்தாளே...



♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥
♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥ 
 எத்தனை
 காலகள் மிதித்தாலும்
எழுந்து நிற்கின்ற புற்களைப்போல்


காலம் எத்தனை முறை
   மிதித்தாலும்
எழுந்து நிற்கின்றன
    உன் நினைவுகள்.....



♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥
♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥


அன்று நீயும் நானும்
அருகருகே இருந்தும்
உனக்கும் எனக்கும் இடையே
தடையாய் இருந்தது
மெளனம்தான்....


இன்று நீயும் நானும்
தொலைவாய் இருந்தும்
உனக்கும் எனக்கும் இடையே
தொடர்பாய் இருப்பதும் 
மெளனம்தான்........





♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥
♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥


நான் சாம்பல் ஆனாலும்
  என் காதல் வாழுமே....


அந்த சாம்பல் மீதும் உனக்காக
   சில பூக்கள் பூக்குமே....









♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥
♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥


உன்னிடமிருந்து நான்
    விடைபெறாமல்
வந்ததற்குக் காரணம்...


கடைசிவரை 
   நீ என்னுடனே
இருக்க வேண்டும்
 என்பதற்காகத்தான்....





♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥
♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥

                                        உனது கண்களை
     ஒரு சின்னஞ்சிறு பெண்ணுக்கே
       தானமாக வழங்க வேண்டும் என்று
                                  பதிவு செய்....


                        அந்தக் கண்கள்
    அடுத்த தலைமுறையில்
 என்னை மாதிரி
            இன்னுமொரு காதலனை
                        உருவாக்கட்டும்...!!!!





♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥

♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥


          நீ ஒரு தெய்வத்தைப் போல்
                         எங்கோ இருக்கிறாய்...
  நான் ஒரு பக்தனைப் போல்
                   எங்கிருந்தாலும் உன்னைக்
                 காதலித்துக்கொண்டிருக்கிறேன்....





♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥
♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥


என் உடலில் உயிராக ஓடிக்கொண்டிருப்பது
    உன் நினைவுதான்....


எனக்கு மரணம் என்பது
                          உன்
  நினைவுப் பிரிதல்தான்....





♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥
♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥

 உன்னை முதன்முதலில்
    பார்த்த நொடியிலிருந்துதான்
           என் வாழ்வு
கணக்கிடப்படுகிறது....


♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥
♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥

சொல்லாத காதல் சொர்க்கத்தில் சேராது
  என்று சொல்பவர்கள்
சொல்லிவிட்டுப் போகட்டும்.....


எனக்கு சொல்லாத காதலே
       சொர்க்கம்தான்...


♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥
♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥

எல்லோருக்கும் தூக்கம் வந்த பிறகுதான் 
  கனவு வரும்....
எனக்கோ உன் கனவு வந்த பிறகுதான் 
  தூக்கமே வருகிறது...





♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥
♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥

புவியின் ஈர்ப்பு விசையில் எப்போவாவது
  தவறி விழுந்திருக்கிறேன்...


உனது விழியின் ஈர்ப்பு விசையில்
  எப்போதும் தவறாமல் 
       விழுந்துகொண்டிருக்கிறேன்....



♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥
♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥

உன்னை ஏன் இப்படிக் 
   காதலித்துத் தொலைக்கிறேன்...??


  அடிக்கிற அம்மாவின் கால்களையே 
            கட்டிக்கொண்டு அழுகிற
                            குழந்தை மாதிரி....



♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥
♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥


ஏதோ சில கவிதைகளை மட்டும் எழுதியே
  சுலபமாய் ‘கவிஞன்’ என்கிற பெயரை
 வாங்கிவிட்டேன்.....


ஆனால்...


எவ்வளவு காதலித்தும் அவ்வளவு சுலபமாய்
  ‘காதலன்’ என்கிற பெயரை
 மட்டும் வாங்க முடியவில்லையே
       உன்னிடம்...




♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥
♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥


என் விரலை பிடித்து ‘அ’ எழுத 
     கற்றுத் தந்தது அம்மா...
 என்னையே விரலாய் பிடித்து காதல் எழுத
         கற்றுத் தந்தது நீ...




♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥
♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥


விளக்குகளை அணையுங்கள்...
  காதல் மின்மினிகள் வருகின்றன...















♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥  ♥♥♥  ♥♥♥   ♥♥♥